tamilnadu

img

உலக தண்ணீர் தினத்தில் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டது. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் கீழத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அதிராம்பட்டி னம் ஜாவியா சாலை, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், தனியார் நிறுவன தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பிற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சாலையில் குழிகள் தோண்டி வருகின்றனர்.  இதில், பெரிய ஜூம்மா பள்ளிவாசல் அருகில் தோண்டப்பட்ட குழியால், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஆறுபோல் ஓடியது.  இதனால், அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளின் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோ கத்தில் தடை ஏற்பட்டது. மார்ச் 22 உலக முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், குடிநீர் வீணாகி சாலையில் ஓடியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

;