தஞ்சாவூர், செப்.4- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திங்களூரில் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மருதகாசியின் இளைய சகோதரர் ஆசிரியர் து.பிரகாஷ் - சு.விஷ்ணுபிரியா திருமண நிகழ்ச்சி அண்மை யில் நடைபெற்றது. இதில் சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளிக்கு ரூ 2 ஆயிரம் நன்கொடையாக சிஐ டியு மாவட்டச்செயலாளர் சி.ஜெயபாலிடம் வழங்கப்பட்டது. அப்போது முறைசாரத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.