தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை அருகே சுமார் ஆறடி நீளத்திற்கு பள்ளம் உள்ளது. வேகத்தடையில் ஏறும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுவது வாடிக்கையாக உள்ளது. நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழி யாகத் தான் வந்து செல்ல வேண்டும். தினசரி இந்த பாதை யில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் சென்று வந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக பள்ளத்தை மூட நட வடிக்கை எடுப்பதோடு நகரின் பல்வேறு இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே ஆவணம் சாலை, சேது சாலை, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பள்ளங்களையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.