tamilnadu

img

குடிநீர் வழங்கக் கோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை சிபிஎம் தலைமையில் மக்கள் முற்றுகை

தஞ்சாவூர், ஆக.20- தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 1ஆவது வார்டு பம்பிங் ஸ்டே ஷன் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கேட்டு, மாநகராட்சி ஆணையர் அலு வலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதையடு‌த்து மாநகரக்குழு உறுப்பினர் சி.ராஜன், 1ஆவது வார்டு பம்பிங் ஸ்டேஷன் பகுதி கிளைச் செய லாளர் கே.ஜெனிபர் கென்னடி, மாந கரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார் மற்றும் மாநகரக்குழு தோழர்கள் எஸ்.மனோகரன், எல்.துரை, ஏ.கே.சுந்தர், எம்.கோஸ்கனி, சி. ராமு, இ.வசந்தி, எஸ்.சாந்தா மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திரண் டனர். இதையடு‌த்து அதிகாரிகள் சமா தானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், ‘இரண்டு தினங்களுக்கு லாரி மூலம் குடிதண்ணீர் வழங்குவது, உடனடியாக குழாய் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது. இதையடு‌த்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்.குருசாமி, பி.செந்தில் குமார் ஆகியோர் கூறுகையில், “அதி காரிகள் வாக்குறுதியை ஏற்று, போரா ட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படு கிறது. அதிகாரிகள் ஒப்புக் கொண்ட வாறு குடிநீர் வசதி செய்து தர தாம தித்தால், காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்றனர்.

;