கும்பகோணம், மார்ச் 11- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த பிரபுசங்கர் (45) என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று வந்த நிலையில், அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தின் பெயரில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள்ள ‘கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு’ சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்து வர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவரின் ரத்த மாதிரி சேக ரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள அரசு ரத்த பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.