தஞ்சாவூர்,மார்ச் 19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோ னா விழிப்புணர்வு கட்டுப் பாட்டு அறை வியாழக் கிழமையன்று திறக்கப் பட்டது. பேராவூரணி வட்டாட்சி யர் க.ஜெயலெட்சுமி, கட்டுப் பாட்டு அறையை திறந்து வைத்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தர மூர்த்தி, வருவாய் ஆய்வா ளர்கள் சுப்பிரமணியன், கிள்ளி வளவன், வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து வட்டாட்சி யர் க.ஜெயலெட்சுமி கூறு கையில், பேராவூரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில், வட்டாட்சியர் நிலை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், மருத்து வர்கள், காவல்துறை அலுவலர் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய, 3 குழுக்கள் அமை க்கப்பட்டு, கொரோனாநோய்த் தொற்று ஏற்படாமல் கக் காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்க ளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04373-232456 என்ற எண்ணுக்கு, தொ டர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி யோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சார் ஆட்சியர் ஆய்வு
இந்நிலையில், பட்டுக் கோட்டை சார் ஆட்சியர் கிளா ஸ்டன் புஷ்பராஜ் ரயில்வே நிலையம் , பேருந்து நிலை யம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவிகள், பொதுமக்களி டம் கொரோனா வைரஸ் பற்றிய துண்டுப்பிரசுரங்க ளை வழங்கினார்.