tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர் முழக்கப் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.1- இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு இவற்றுக்கு எதிராக தஞ்சையில் அனைத்து கட்சிகள், அமைப்புகள், இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்பு கள், தன்னார்வ அமைப்புகள் ஒன்றி ணைந்து தஞ்சை ரயிலடியில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டச் செய லாளர் பி.ஜி. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், சிபிஐ (எம்.எல்) விடுதலை அருணாசலம், தாளாண்மை உழவர் இயக்கம் திரு நாவுக்கரசு, தமிழர் தேசிய முன்னணி அய்யனாபுரம் முருகேசன், திராவிட கழகம் அமர்சிங், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சொக்கா ரவி, தமிழ் தேச மக்கள் முன்னணி அருண்ஷோரி, அனைத்து ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனி ராஜன், மக்கள் அதிகாரம் காளியப்பன் உரை யாற்றினர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் தேசிய கொடியை கையி லேந்தி திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.  அடுத்த கட்டமாக 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து அணைக்கரை வரை நடை பெற உள்ளது. இதையொட்டி 5 லட்சம் துண்டறிக்கைகள் வீடு வீடாக சென்று கொடுக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மனித சங்கிலியில் லட்சம் பேர் பங்கேற்று தமிழகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான போராட்டமாக வும், இந்தியாவிற்கே ஒரு எழுச்சி யை உண்டாக்குகிற போராட்டமா கவும் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.  இது அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கின்ற போராட் டம் என்பதால் இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ப தில் தவறில்லை எனவே அரசியல மைப்புச் சட்டத்தை பாதுகாக்கின்ற இந்த போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அமைப்பு கள், கிறிஸ்தவ அமைப்புகள், அதே போல பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், விவசாயிகள், அரசு பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அறை கூவல் விடுக்கப்பட்டது.
மன்னார்குடி 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மன்னார்குடியில் மக்கள் ஒற்றுமை மேடை ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தேரடி காந்தி சிலையிலிருந்து துவங்கிய மனித சங்கிலி இயக்கத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், மூத்த உறுப்பினர் சந்திரஹாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகரச் செயலாளர் கே.பிச்சை கண்ணு இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கே.டி. கந்தசாமி ஜி.ரகுபதி, எம்.சிராஜூதீன், கே.அகோ ரம், பி.கலைச்செல்வி, ப.தட்சிணா மூர்த்தி, உள்ளாட்சிதுறை சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் 
அரியலூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனித சங்கிலி இயக்கம் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சிற்றம்பலம் தலைமையில் இஸ்லாமிய தலை வர்கள் நூர்முகமது, சையத்ரசித், அப்பாஸ், காங்கிரஸ் நகர தலைவர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மணிவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரை சாமி, கைத்தரி சங்க மாவட்டச் செய லாளர் துரைராஜ், மாதர் சங்க தலைவர்கள் பாக்கியம், பத்மாவதி, மலர்கொடி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருண்பாண்டியன், விசிக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

;