தஞ்சாவூர், மே 18- அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 24 பணிகளுக்கு ரூ 12.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர், சொக்கநாதபுரம் கிராமத்தில், செந்நெல்லிக்குளம் ரூ 44 லட்சத்தில் பாசனதாரர் சங்கம் மூலம், குடிமராமத்துப் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.