tamilnadu

img

இருதய சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், செப்.29 ஆம் தேதி உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 200 க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இம்முகாமில் தலைமை இதய நோய் சிகிச்சை மருத்துவர் பி.கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ ஆலோசனை மற்றும் இருதய நோய் குறித்த பரிசோதனைகளை வழங்கினர்.