tamilnadu

பெத்தனாட்சிவயல் அடிப்படை வசதிகள் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர், பிப்.12- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஊமத்தநாடு ஊரா ட்சிக்குட்பட்ட பெத்த னாட்சிவயல் கிராமத்தில் அடி ப்படை வசதிகள் இல்லாமல்  பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக தீக்கதிர் உள்ளி ட்ட பல்வேறு நாளிதழ்களில் செய்தி வெளியானது.  இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக இப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்த தஞ்சை யின் புதிய ஆட்சியர் ம.கோ விந்தராவ் பெத்தனாட்சி வயல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின்வசதி, சாலை வசதி இல்லாமலும், சரியான வீட்டு  வசதி இன்றியும் பொது மக்கள் வசித்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பிள்ளைகள் சரியாக  பள்ளி செல்லாத நிலை இரு ந்தது. இதையடுத்து, அதி காரிகள் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் முடி வடைந்த நிலையில், செவ்வா ய்க்கிழமை அனைத்து துறை அதிகாரிகள் பெத்த னாட்சிவயல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, இரண்டு சாலைகள் அமை க்கவும், இலவச மனைப்ப ட்டா பெற்றுள்ளவர்களின் இடத்தை அளந்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட த்தில் 33 வீடுகள் கட்டித் தரவும், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், கூடு தலாக குடிநீர் இணைப்பு வழங்கவும் அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து வருகின்ற னர்.

;