tamilnadu

img

நெல் நடவுப் பணியில்  வேளாண் மாணவர்கள் 

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தில் அனுசரணை ஆராய்ச்சி திடல் நடவுப் பணியில் தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.  கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி மேற்பார்வையில், சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலர் ச.சங்கவி, உதவி வேளாண்மை அலுவலர் பாலசந்தர் ஆகியோர் கண்காணிப்பில், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ப.வெங்கடேசன், விஜய், வேலு, சி.ராஜேஷ்குமார், தாமு, கபிலன், சூரிய பிரகாஷ் ஆகியோர் ராஜேஷ் என்பவரது வயலில் விவசாயத் தொழிலாளி லட்சுமி என்பவருடன் இணைந்து பயிற்சி பெற்றனர்.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள நெல் ரகத்தை, வேளாண் கல்லூரி மாணவர்கள் அனுசரணை ஆராய்ச்சி திடலில், வரிசை நடவு முறையில் நடவு செய்தனர். தொடர்ந்து மண்ணின் தன்மை, பயிர் வளர்ச்சி, கிளைகள் விடுதல், நெல் மணிகளின் தன்மை, நோய் தாக்குதல், அறுவடை மற்றும் முழு சாகுபடி குறித்து மாணவர்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளதாகவும், இதற்காக இப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிக்க உள்ளனர்.