தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மானோஜிபட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை ஆட்சியர் ம.கோவிந்தராவ் துவக்கி வைத்தார். போட்டியில் திருச்சி உளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 731 காளைகளும், 323 காளைபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியின் போது 24 காளைபிடி வீரர்கள் மற்றும் 8 பார்வையாளர்கள் என 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட 10 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.