tamilnadu

இ-பாஸ்களை தவறாக பயன்படுத்திய 3 பேர் கைது

 தஞ்சாவூர், மே 30- தஞ்சாவூர் மாவட்டம் எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்டு என்பவர் நாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸை சென்னையிலிருந்து திரும்பும் போது கும்பகோணத்தை சேர்ந்த நபர்களை அழைத்து வருவதற்காக தவறாக பயன்படுத்தினார்.  இதே போன்று, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிர்மல் மற்றும் சங்கர் ஆகிய இரு நபர்கள் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட இரண்டு நபர்கள் கூடுதலாக அழைத்துச் சென்றுள்ளனர். இதைதொடர்ந்து அவர்கள் மூன்று நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தின் போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றிட வழங்கப்படும் இ-பாஸ்களை தவறாக பயன்படுத்துவது மற்றும் கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீதும், இ-பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறு பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். அரிசி, மளிகை பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என ரூ இரண்டாயிரம் மதிப்பிலான உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார்.

;