tamilnadu

img

தில்லியில் 24 மணி நேர போராட்டம் தஞ்சை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

தஞ்சாவூர் நவ.22- மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலி யுறுத்தி நவம்பர் 25 அன்று பகல் 11 மணிக்கு தொடங்கி 26 செவ்வாய்க்கிழமை பகல் 11 மணி வரையிலான 24 மணி நேர அகில இந்திய அளவிலான தர்ணா போராட்டம் தில்லி நாடாளுமன்றம் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற உள்ளது.  இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் 40 பேர் தில்லி புறப்பட்டுச் சென்றனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன் தலைமையில், மாவட்ட துணைத் தலை வர் சங்கிலி முத்து, மாவட்ட துணைச் செயலா ளர் கிறிஸ்டி, தஞ்சை ஒன்றியத் தலைவர் சேகர், பேராவூரணி ஒன்றியத் தலைவர் சுதாகர், குடந்தை ஒன்றியச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை ரயில் மூலம் தஞ்சையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, தஞ்சை ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் என்.சரவணன் வழியனுப்பி வைத்தார்.