தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. தஞ்சையில் 28,540 பேர் இத்தேர்வை எழுதினர். தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) டி.மணிமேகலை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.