tamilnadu

img

பார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த நிக்கி லௌடா காலமானார்

பார்முலா ஒன் எனப்படும் கார் பந்தயத்தில் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த நிக்கி லௌடா தந்து 70வது வயதில் காலமானார்.


ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கார் பந்தய விளையாட்டின் சிறந்த வீரரான நிக்கி லௌடா இதுவரை 171 போட்டிகளில் பங்கேற்று 25 வெற்றிகளை பதித்தவர். கடந்த 1975, 1977 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டங்களை வென்றவர். இவர் 1976 ஆம் ஆண்டு நடந்த கார் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கினார். விபத்தில் பெரும் தீக்காயங்களை அடைந்த அவர் வெகு விரைவில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.


இவருக்கு சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வயது மூப்பின் காரணமாக அவர் இன்று காலமானார். நிக்கியின் மறைவிற்கு பார்முலா ஒன் விளையாட்டில் பங்கேற்கும் பல நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.