tamilnadu

img

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கான் டி லாங் காலமானார்

கிரிக்கெட் உலகின் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து அணியின் ஆல்ரவுண்டரான கான் டி லாங் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்.2012-2013ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் கவுண்டி கிளப்பில் நார்த்தாம்டன்ஷியர் அணிக்காக விளையாடினார்.இவரது அபார ஆட்டத்தைப் பார்த்து ஸ்காட்லாந்து அணி 2015-ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கெதிரான டி-20 போட்டியில் களமிறக்கியது.தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாடிய கான் டி லாங் தேசிய அணியில் சொதப்பினார்.இருப்பினும் அணி நிர்வாகம் அவரை நீக்காததால் 2 ஆண்டுகள் தொடர்ந்து அணியில் விளையாடி வந்தார்.  கடைசியாக பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (2017) பங்கேற்றார்.அதன் பின்பு மூளையில் கட்டி உள்ளது என்பது தெரியவந்ததால் கிரிக்கெட் விளையாட்டை விட்டு ஒதுங்கினார்.மூளைக்கட்டியுடன் ஒரு ஆண்டுக்கு மேலாக அவதிப்பட்ட கான் டி லாங் வெள்ளியன்று உயிரிழந்தார்.33 வயதாகும் கான் டி லாங்கிற்கு கிளாரி என்ற மனைவியும் டெய்சி மற்றும் ரோரி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.லாங்கின் மறைவிற்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;