2020ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதையடுத்து 4 ஆண்டுகள் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது.
2020ம் ஓலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து போட்டியில் ரஷ்யா பங்கேற்க முடியாது. மேலும் இவ்விரு போட்டிகளிலும் ரஷ்யாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.