ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா - கனடாவின் டேனிஸ் ஜோடி 4-வது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்தின் நீல் - முர்ரே ஜோடியிடம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதே போல கலப்பு இரட்டையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஸ்பியர்ஸுடன் ஜோடி சேர்ந்த இந்தியாவின் போபண்ணா, மார்ட்டின் (பிரான்ஸ்) - அடவோ (அமெரிக்காவின்) ஜோடியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மார்ட்டின் - அடவோ ஜோடி 7-5, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று போபண்ணா - ஸ்பியர்ஸ் ஜோடியை வெளியேற்றியது. ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் 4-வது சுற்றிலேயே நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.