tamilnadu

img

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு அபராதம்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கு கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள்ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு, பெண்கள் தொடர்பான பாலியல் அந்தரங்க கருத்தைக் கலந்துரையாடி சர்ச்சையை ஏற்படுத்தினர்.இவர்களின் கீழ்த்தரமான கருத்தால் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் சீறின.ஒழுங்கு நடவடிக்கையில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) வாரியம் இருவரையும் இடைநீக்கம் செய்தது. பின்னர் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இருவரையும் அணியில் சேர்த்தது. பாண்டியா-ராகுல் பிரச்சனைக்கு உதவுமாறு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தது. அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் இருவர் மீதான பிரச்சனையைத் தீர்க்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்தது.  


கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற டி.கே.ஜெயினின் விசாரணை முடிவில் இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டி.கே.ஜெயினின் தீர்ப்பில், “சர்ச்சைக்கு உள்ளான இருவரும் (ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்) புல்வாமா தாக்கு தலில் பலியான துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கவளர்ச்சிக்காக ரூ.10 லட்சத்தை வழங்க வேண்டும். 4 வாரங்களு க்குள் இந்த தொகையை டெபாசிட்செய்யாவிட்டால் போட்டி கட்டணத்திலிருந்து பிசிசிஐ இந்ததொகையைக் கழித்துக் கொள்ள வேண்டும்” என தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ள நிலையில், காபி வித் கரண் விவகாரம்அபராதத்துடன் நிறைவடைந்துள்ள தால் இருவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;