tamilnadu

img

கஸகஸ்தானில் நடைபெறுகிறது

இந்தியா - பாக்., மோதும் டேவிஸ் கோப்பை

டென்னிஸ் விளையாட்டின் உலக சுற்றுப்பயண தொட ரான டேவிஸ் கோப்பை  தொடரில் ஆசிய - ஓசேனியா குரூப் 1 பிரிவு ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இஸ் லாமாபாத்தில் பாகிஸ்தான் மோதுவ தாக அட்டவணை தயாரிக்கப்பட்டி ருந்தது.  வரும் 29, 30 ஆகிய தேதிகளில் டேவிஸ் கோப்பை நடைபெறவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் பிரச்சனையைக் காரணம் காட்டி இந்திய டென்னிஸ் சங்கம் பாகிஸ்தானில் நடை பெறும் டேவிஸ் கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுத்தது.  இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் பாகிஸ்தானின் கடும் எதிர்ப்பையும் மீறி போட்டியை மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானுக்கு மாற்றி யுள்ளது.

வீரர்கள் விபரம் 

லியாண்டர் பயஸ், சுமித் நாகல், ராம் குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோரும் மைனேனி, சித்தார்த் ராவத் ஆகியோர்  மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள் ளார்கள்.  லியாண்டர் பயஸுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாடு வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹன் போபண்ணா காயம் காரணமாக விலகு வதாக அறிவித்தார். இதனையடுத்து ஜீவன் நெடுஞ்செழியன் லியாண்டர் பய ஸுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கழற்றிவிடப்பட்ட மகேஷ் பூபதி 

இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத (பெஞ்ச்) அணி கேப்டனாக இருந்த மூத்த வீரர் மகேஷ் பூபதி இந்திய டென்னிஸ் சங்கத்தின் ஆலோசனை மற்றும் முன்னறிவிப்பு இன்றி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பாதுகாப்பு பிரச்சனையால் பங்கேற்க முடியாது எனத் தன்னிச்சையாக அறிவித்தார். இதனை முற்றிலும் எதிர்பாராத இந்திய டென்னிஸ் சங்கம் அவரை அணியிலிருந்து கழற்றிவிட்டது. அவருக்குப் பதிலாக ரோஹித் ராஜ்பால் பெஞ்ச் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மகேஷ் பூபதிக்கு எச்சரிக்கையுடன் அளிக்கும் தண்டனை ஆகும்.