tamilnadu

img

ஏடிபி 24 டென்னிஸ் அரையிறுதியில் செர்பியா

டென்னிஸ் உலகின் புதுவகை தொடரான ஏடிபி டென்னிஸ் தொடர்  ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா உள்ளூர் மக்களின் கரகோசத்தின் உதவியால் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து ரஷ்யா, அர்ஜெண்டினாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.   வெள்ளியன்று நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் செர்பியா - கனடா ஆகிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செர்பிய வீரர்கள் ஒற்றையர் (2),  இரட்டையர்(1) என இரண்டு பிரிவுகளிலும் தோல்வியை ருசிக்காமல் 3-0 என்ற கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது. செர்பியா தரப்பில் ஜோகோவிச் ஒற்றையர் பிரிவில் மட்டும் விளையாடி வருகிறார். பலமான வீரர்களைக் கொண்டாலும் கனடா அணி தோல்வி கண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம் 

காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று நிறைவு பெற்ற நிலையில், சனியன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் ரஷ்ய - செர்பிய ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. 4ஆவது காலிறுதி ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியோடு (பெல்ஜியம் - ஸ்பெயின்) ஆஸ்திரேலியா 2ஆவது அரையிறுதியைத் தொடங்கும். 2ஆவது அரையிறுதி ஆட்டம் இரவு ஆட்டமாக நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.  

யாருக்கு வாய்ப்பு?

தற்போதைய நிலவரப்படி கோப்பை வெல்லும் நாடு இது தான் என்று திடமாக  கணிக்க முடியாது. செர்பியா, ஸ்பெயின், ஆஸ்திரேலிய  அணிகளுக்கு 70% வாய்ப்புகள் உள்ளன. ரஷ்ய அணி வேறு ஒவ்வொரு செட்டிலும் ஒவ்வொரு ஆட்டமுறையை விளையாடி வருவதால் அந்த அணிக்கும் 50% வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

;