tamilnadu

img

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்பெர்ன் நகரில் நடைபெற்றது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 5-ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய டொமினிக் தீம் அதை 6-4 எனக் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். 4-வது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் டொமினிக் தீம் களம் இறங்கினார். ஆனால் ஜோகோவிச் அபாரமாக விளையாடி 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் ஐந்தாவது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி ஜோகோவிச் 6-4, 6-4, 2-6, 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இது சர்வதேச அளவில் அவர் வெல்லும் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேபோல் ஆஸ்திரேலியா ஓப்பனில் அவருக்கு 8வது பட்டமாகும். இந்த வெற்றிக்கு பின் பேசிய ஜோகோவிச் மெல்போர்ன் மைதானம் எனக்கு சாதகமான ராசியான மைதானம். உலகிலேயே பிடித்தமான விளையாட்டரங்கம் இதுவே. மீண்டும் கோப்பையை பெற ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இளம் வீரர் டொமினிக் தீம் கண்டிப்பாக ஒருநாள் இந்த சிறப்பை அடைவார். வெற்றி அவர் அருகில் உள்ளது. பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வார் என்று தெரிவித்தார்.
 

;