tamilnadu

img

டென்னிஸ் பவுன்சர்

உங்களுக்குத் தெரியுமா? 

டென்னிஸ் விளையாட்டில் சமீப காலமாக ஒரு வித்தியாசமான முறை நடைமுறையில் முளைத்துள்ளது. அந்த முறை கிரிக்கெட் விளையாட்டில் பிரபல பெயரான பவுன்சர் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுவருகிறது. அது யாதெனில் டென்னிஸ் வீரர்கள் எதிர்பக்கம் திருப்பும் பந்தை பிட்ச் பகுதியில் அழுத்தி சற்று உயரமாக எழும்பும் படி திருப்புகிறார்கள். அதாவது எதிரணி வீரர்களுக்கு தலைக்கு மேல் பந்து எகிறுகிறது. சில வீரர்கள் திருப்ப கடுமையாகத் திணறுகிறார்கள்.சமீபத்தில் நிறைவு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்த வகை ஷாட்கள் 75%  விளாசப்பட்டுள்ளன. எனினும் இந்த வகை ஷாட்களை முன்னணி வீரர்கள் - வீராங்கனைகள் மட்டுமே அதிகம்  விளாசுகின்றனர். அதுவும் மகளிர் பிரிவில் இந்த வகை ஷாட்கள் பிரபலமாக உள்ளன.இதற்கு பெயர் தான் டென்னிஸ் பவுன்சர்.