tamilnadu

img

ரோஜர் பெடரருக்கு நாணயம் சுவிட்சர்லாந்து அரசு முடிவு

டென்னிஸ் உலகின் முன்னணி வீரரும், நவீன சாதனையாளர் என்ற இரட்டை பெருமை உடையவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (38) ஆவார். தனது அதிரடி பாணி ஆட்டத்தால் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம்  வென்றதுடன் மட்டுமல்லாமல் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். நாட்டுக்காக அதிகம்  பெருமை சேர்த்த ரோஜர்பெடரரை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர் லாந்து  அரசு “சுவிஸ் பிராங்க்”  நினைவு நாணயங்களை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியிடுகிறது. 

மேலும் அவரது உருவம் பொறித்த நாணயம் (புழக்கத்திற்கு) ஒன்றையும் வெளியிட சுவிஸ் அரசு  முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்து வரலாற்றில் வாழும் மனிதருக்கு “சுவிஸ் பிராங்க்” நினைவு நாணயம் வெளியிடுவது இதுவே முதல்முறை யாகும். சுவிட்சர்லாந்து அரசின் முடிவுக்கு ரோஜர் பெடரர் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.