tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ்  டிராப் ஷாட்களில் கலக்கும் இளங்கன்றுகள்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன் றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற் போது 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. விளையாட்டு துறையில் டிராப் ஷாட் என்பது பேட் மிண்டன் துறையின் மிக முக்கியமான செயலாகும். டிராப் ஷாட் வேலை தெரிந் தால் தான் பேட்மிண்டன் விளையாட முடியும். டிராப் ஷாட் என்பது எதிரணி நோக்கி அடிக்கும் இறகுப்பந்து  வலைக்கு மிக அருகில் விழுமாறு மெது வாக அடித்து புள்ளிகளைப் பெறுவது ஆகும். இந்த மாதிரியான ஷாட்கள் தற்போது டென்னிஸ் விளையாட்டிலும் அதிகம் முளைத்துள்ளது. அகாசி, பிட் சாம்ப்ராஸ் காலத்தில் டென்னிஸ் டிராப் ஷாட்கள் முளைத்தாலும் நடால், பெடரர், முர்ரே போன்ற வீரர்களே அடிக்கடி டிராப் ஷாட் முறையைப் பயன்படுத்தி புள்ளிகளைக் குவித்து வந்தனர். மகளிர் பிரிவில் வீராங்கனைகள் பெரும்பாலும் டிராப் ஷாட் விளாச விரும்ப மாட்டார்கள். தற்போதைய நவீனக் காலத்தில் எல்லாம் மாறி விட்டது. புதிதாக கள மிறங்கும் இளங்கன்றுகள் டிராப் ஷாட்டில் கலக்கு கின்றனர். அதும் டென்னிஸ் பந்து ரிவர்ஸ் ஆகும் வகை யில் டிராப் ஷாட் அடிக்கப் படுகிறது. பந்து ரிவர்ஸ் ஆனால் பந்தை எதிர் பக்கம் திருப்புவது கடினம் என்பதால் அதிரடி ஷாட்டிற்கு இங்கு வேலையில்லை.  தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இளங்கன்று கள் இந்த வகையான ரிவர்ஸ்  டிராப் வகை ஷாட்களை அதிகம் கையாள்கின்ற னர். இதனால் பல முன்னணி வீரர் - வீராங்க னைகள் திணறலுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி வருகின்றனர். சிலர் இளங்கன்றுகளின் டிராப் தொல்லை தாங்கமுடியாமல் அதிர்ச்சி தோல்வியை ருசித்து  வீட்டிற்குச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;