tamilnadu

img

ஜப்பானைச் சேர்ந்த கண்பார்வையற்ற ஒருவர் பசுபிக் பெருங்கடலின் நாண்ஸ்டாப் பசுபிக் கிராசிங்கை கடந்து சாதனை

ஜப்பானைச் சேர்ந்த மிட்சுஹிரோ இவாமோடோ என்ற கண்பார்வையற்றவர் பசுபிக் பெருங்கடலின் நாண்ஸ்டாப் கிராசிங்கை என்ற பயணத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.


பசுபிக் பெருங்கடலின் நாண்ஸ்டாப் பசுபிக் கிராசிங்(non-stop Pacific crossing) என்ற தொலைவை உலக சாதனைக்காக பல கடல்பயணிகள் கடக்கும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுஹிரோ இவாமோடோ என்ற 52 வயதுடைய கண் பார்வையற்ற நபர் சுமார் 14000 கிலோ மீட்டர் தொலைவிலான நாண்ஸ்டாப் பசுபிக் கிராசிங் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார்.


கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து கிளம்பிய இவாமோடோ ஒரு வழிகாட்டும் நபரின் உதவியோடு நேற்று ஜப்பான் நாட்டின் ஃபுகுசிமா துறைமுகத்தை வந்தடைந்தார். கடந்த 2013ல் இவர் இதே முயற்சியை செய்தபோது இவரின் படகு திமிங்கலம் ஒன்றால் தாக்கப்பட்டு மூழ்கியது. பின்பு அவர் ஜப்பான் ராணுவத்தால் மீட்கப்பட்டார். கடந்த இரண்டு மாத காலமாக கடல்வழியில் பயணித்து இந்த சாதனையை அவர் செய்துள்ளார்.


;