tamilnadu

img

ஜப்பான் கப்பலில் 542 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில், 542 பேருக்கு கரோனா வைரச் பாதிப்பு இருப்பது, பரிசோதனை கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை சீனாவில் 2 மருத்துவர்கள் உட்பட  1,868 பேர் பலியாகி உள்ளதாகவும், 72,436 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், 12, 552 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்ற டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலை கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலில் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேர் இருந்தனர். அதில் சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சத்தால், கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 இந்தியர்கள் உள்பட மொத்தம் 542 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

;