tamilnadu

40 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் நன்றி

சேலம், ஜூலை 15- சேலத்தில் பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்தது தொடர்பாக 40 ஆண்டு காலமாக இருந்து வந்த பிரச்சனை மார்க் சிஸ்ட் கட்சியின் முயற்சியால் தீர்வு காணப்பட்டது. சேலம் மாநகரம் 16 ஆவது கோட்டம் ஐய் யனார் கவுண்டர் தோட்டம் கல்லாங்குத்தூர் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வரு கிறார்கள். இப்பகுதியில் தெற்கு வடக்காக செல்லும் பாதையின் இறுதியில் சுமார்  440 சதுரடி நிலத்தை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் 40 வருடங்களாக ஆக்கிரமித்து தகராறு செய்து வந்துள்ளனர்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் பலனில்லை. இச் சூழலில் ஆக்கிரமிப்பாளர்கள் பாதையில் திடீரென தடுப்புச் சுவர் எழுப்பி, இரும்புக்  கதவும் போட்டு பாதையை அடைத்துள்ள னர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர  நிர்வாகிகளை சந்தித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து பிரச் சனைக்குரிய இடத்திற்கு சென்று, ஆவ ணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது சம்மந்தப்பட்ட நிலம் பொதுப்பாதையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நிலத்தை நில அளவையர் மூலம்  அளந்து  ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையர் ஆகியோரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் எதிர்வரும் ஜூலை 20 ஆம் தேதியன்று சேலம் மாநக ராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்களுடன் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், அஸ்தம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள், மாநகராட்சி மற் றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந் தப்பட்ட நிலத்தை ஆவணங்களை வைத்து அளந்து பார்த்தபோது மேற்படி நிலம் முழுவதும் மாநகராட்சிக்கு சொந்த மானது என உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தடுப்புச்சுவர் மற்றும் இரும்பு கேட் அகற்றப்பட்டு இது முழு வதும் பொதுப்பாதை, மக்கள் பயன் படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் அறி வித்ததோடு, இதனை யாராவது சொந்தம் கொண்டாடினாலோ, ஆக்கிரமித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.  இதனால் 40 ஆண்டுகால பிரச்சனைக்கு  தீர்வு காணப்பட்டது. இதையடுத்து அப் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவின்குமார், வி.வெங்கடேஷ், பி.ராஜேஷ்குமார், ஆர்.கே.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

;