tamilnadu

img

தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு தமிழக அரசு கணக்கெடுக்கவில்லை...

சேலம்:
தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு தமிழக அரசு   கணக்கெடுக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் கமலாபுரம் விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி 16 அன்று  தொலைக்காட்சிப் பெட்டிஇல்லாதவர்கள், விருப்பப்பட்டால் மாணவர்கள் பள்ளியில் வந்து பிரதமரின் உரையை பார்த்துக் கொள்ளலாம், இது கட்டாயமில்லை. தேசிய குடியுரிமை பதிவேடுகிடையாது. அதுகுறித்துநாங்கள் கணக்கெடுக்கவில்லை.  மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பொறுத்தவரை, குடும்பத் தலைவர் பெயர், சொந்த வீடு உள்ளதா? வீட்டிலுள்ள அறைகள் உட்பட 34 விவரங்கள் அதில் பதிவு செய்கிறார்கள். அதைத் தான் முதற்கட்டமாக எடுக்கின்றார்கள். என்.பி.ஆர். அடுத்த வருடம் தான் எடுக்கின்றார்கள். என்.பி.ஆர்.ஐ  பொறுத்தவரை ஒரு குடும்பத்தை தனித்தனியாக பிரிக்கின்றார்கள்.

குடும்பத்திலிருந்து ஒட்டு மொத்தமாக எடுப்பது மக்கள் தொகை சென்ஷஸ். சென்ஷஸ் சட்டப்படி இதையாரும் வெளியிட முடியாது.ஆனால், என்.பி.ஆர். வெளியிட முடியும். என்.பி.ஆரில்தான் ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இடம்பெற்றிருந்தாலும், தனித்தனியாக விவரங்களை எடுக்கின்றார்கள். இதில் எந்தவித பிரச்சனையும் கிடையாது. இதில்யாரும் பாதிக்கப்படப்போவது இல்லை.  இந்தியநாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் எவரும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;