இளம்பிள்ளை, நவ.9- சேலம் மாவட்டம், இடங் கணசாலை பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி குறித்த ஆய்வு நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூ ராட்சி பகுதியில் 18 வார்டு கள் உள்ளன. இப்பகுதி யில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின் றனர். இந்நிலையில் சில தினங்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் குழந் தைகள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், அலுவலகப் பணியாளர் கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 40 பேர் கொண்ட மூன்று குழுக்களாக வீடு, கடை, பேக்கரி, தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் டெங்கு லார்வா புழுக்கள் உள்ளதா என கண்டறிந்து, அதனை அழிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் ஆய்வின் போது டெங்கு லார்வா புழுக்கள் காணப் பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்ச ரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் இந்த குழுக்கள் சுழற்சி முறையில் டெங்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடங்கணசாலை 6ஆவது வார்டு பரம கவுண்டனூர் பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், செயல் அலுவலர் மேகநாதன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் டெங்கு ஒழிப்பு ஆய்வு பணியை மேற்கொண்டனர்.