tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைத்தார். 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தேவையான நீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுகிறது. குறுவை, தாளடி, சம்பா என 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைத்தார். 

முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை தேவையைப் பொறுத்து திறந்து விடப்படும்.  இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. 

;