சேலம், மார்ச் 1- சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை இணைந்து தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட் டத்தின் கீழ் காது கேளாத தோருக்கான சிறப்பு பரி சோதனை முகாம் சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் ஞாயி றன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடை பெற்ற இந்த முகாமில் செவ்வாய்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு காது சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு செவித்திறன் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் செய்தனர். மருத்துவ பரிசோதனையில் செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், முதலமைச்சரின் விரி வான காப்பீடு திட்டத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த காது கேட்கும் கருவியும் இலவச மாக வழங்கப்பட்டது.