tamilnadu

img

சேலம் உருக்காலையை பாதுகாத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம், ஏப்.5-

சேலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை பாதுகாத்து இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சேலம்நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வெள்ளியன்று அன்னதானப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பேசியஅவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நவரத்தின அந்தஸ்தில் உள்ள சேலம்உருக்காலையை பாஜக அரசு கார்ப்பரேட்டுகளூக்கு விற்க முயற்சி மேற்கொண்டுள்ளது. பலரின் முயற்சியாலும் போராட்டத்தாலும் அந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நான் நாடாளுமன்றஉறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் சேலம் உருக்காலை பாதுகாக்கப்பட்டு. இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதப்படுத்தப்படும். மேலும் உருக்காலை உற்பத்தி திறனை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பின் 47 ஆவது வார்டு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அதன்பின் காவலர்குடியிருப்பு, பஞ்சந்தாங்கிஏரி, 46 ஆவது வார்டு குகைப்பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, பொருளாளர் சுபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ரமணி, காங்கிரஸ் மாவட்டதலைவர் ஜெயபிரகாஸ் உள்ளிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;