சேலம், டிச.8- மக்கள் ஒற்றுமை, மத நல்லி ணக்கம், பன்முக கலாச்சாரம் ஆகிய வற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் சேலம் மாவட் டம், ஆத்தூரில் ஞாயிறன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா குழு சார்பில் ராணிப்பேட்டை திடலில் (மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்) மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் தாலுகா செயலாளர் எ.முருகேசன் தலைமை தாங்கினார். தாலுகா குழு உறுப்பினர் இல.கலைமணி வர வேற்றார். சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பன் முக கலாச்சாரம் குறித்து சிறப்புரை யாற்றினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி ஆகியோர் உரையாற் றினர். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம். குணசேகரன், திமுக நகர செய லாளர் கே.பாலசுப்பிரமணியம், மதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் வி.கோபால்ராஜ், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆர்.பொன்னுசாமி, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஒசுமணி, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தா. வானவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செய லாளர் சி.க.முத்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஷேக் முகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநாட்டில் வேலூர் சாலை கலைக்குழுவினரின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியை ஆத்தூர் தாலுகா குழு உறுப்பினர் கள் எம். சடையன், எஸ்.பிரபு, எல். தங்கம்மாள், ஆர்.துரைசாமி, எ. அமானுல்லா, எ. தர்மலிங்கம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாலுகா குழு உறுப்பினர் கே. வெங்க டாசலம் நன்றி கூறினார். மாநாட் டில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.