tamilnadu

img

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சையில் பிரிவில் எலி

சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலி சுற்றித்திரிவது நோயாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பரிவில் எலி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாலாஜி நாதனிடம் கேட்ட போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகள் உணவுப் பொருட்களை சிந்துவதாலும். தற்போது மழைக்காலம் என்பதாலும் வெளியே சுற்றி திரியும் எலிகள் மருத்துவமனைக்குள் வந்துவிட்டது. 
இதைக்கட்டுப்படுத்தி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.