tamilnadu

பொதுபோக்குவரத்து நிறுத்தம் - கூலித் தொழிலாளர்கள் அவதி

சேலம், ஜூலை 1- தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சேலம் நகர் மற்றும் மத்திய பேருந்து நிலையங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. பேருந்து வராத்தால் தினசரி கூலி தொழி லாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா னார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைக்காக பல்வேறு தளர்வு களை அவ்வப்போது தமிழக அரசு அறி வித்து வந்தது. அதனடிப்படையில் 68 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஒப்புதல் வழங்கியது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவை துவங்கப்பட் டது.  இந்நிலையில், தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததால், தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநி லம் முழுவதும் பொதுபோக்குவரத்து சேவையை தடை செய்து அரசு உத்தர விட்டது.

அதனடிப்படையில் சேலம் மாவட் டத்தில் இயக்கப்பட்டு வந்த 325 பேருந்து களும் நிறுத்தப்பட்டுள்ளதால் சேலம் மாநகர் மற்றும் மத்திய பேருந்து நிலை யங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடியது. மேலும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மட்டும் 8 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் அரசு போக்குவரத்து கழகம் தெரி வித்துள்ளது. மீண்டும் பொது போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளிகள் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர்.

;