tamilnadu

img

ஏற்காடு மலைப்பாதையில் தரமில்லாத சாலை பராமரிப்புப் பணிகள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சேலம், ஜூலை 30- ஏற்காடு மலைப்பாதையில் தரமில்லாமல் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக வும், இதனால் அதிக உயிர் இழப்பு கள் ஏற்படும் அபாயம் உள்ளதென சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு தமி ழகத்தில் உள்ள சிறப்புமிக்க சுற்று லாத் தளமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்ட மலைப்பாதை யில் சுமார் 30 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. சேலம் அடி வாரத்தில் இருந்து ஏற்காடு சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

சுற்றுலாத்தளம் என்பதால் வருடம்  முழுவதும் சாலை மற்றும் சாலை தடுப்புச் சுவர் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. ஆனால், பராமரிப்பு பணிகள் தரமில்லாத பொருட்களைக் கொண்டு நடை பெறுவதால் சாதாரண மழைக்கே தடுப்புச் சுவர் மற்றும் சாலைகள் பழுதாகி விடுவதாக சமூக ஆர் வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இதுதொடர்பாக அவர்கள் கூறு கையில், ஏற்காடு சுற்றுலாத்தளம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால்,  கமிசனுக்காக பராமரிப்புப் பணிகள் தரமில்லாத பொருட்க ளைக் கொண்டு தடுப்புச் சுவர்கள் மற்றும் சாலைகள் போடப்படுகி றது. குறிப்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் இப்பிரச்சனை யில் முறையாக தலையீடு செய்வ தில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வா கம் தரமான பராமரிப்புப் பணி களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;