tamilnadu

img

மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது

மும்பையில் மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மும்பை ஆரோ காலனியில் மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மரங்களை வெட்டும் பணியில் அரசு இறங்கி உள்ளது.
இதற்காக 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நேற்றிரவு காவல் துறையினர் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 20 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 
இந்நிலையில் ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.