tamilnadu

img

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடியை கண்டித்து போராடிய பெண்கள் கைது

தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மைக்ரோ பைனான்ஸ் நுண்நிதி நிறுவனங்கள் அடாவடித்தனமான கடன் வசூல் செய்வதை கண்டித்தும்,2021 மார்ச் வரை கால அவகாசம் வழங்க கோரியும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஒன்றிய தலைவர் அழகுசுந்தரி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர்கற்பகம் உட்பட சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டனர். 

போராட்டம் துவங்கிய அரை மணிநேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் 50 காவல்துறையினர் குவிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக பெண்களை கைது செய்ய முயன்றனர். இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கற்பகம் மற்றும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை வாகனத்தை இடையூறாக நிறுத்தி பொதுமக்கள் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்தனர். மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர். சுமார்11 மணியளவில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், மாதர் சங்க தலைவர்கள்  தங்கம், மேனகா, மல்லிகா, சுந்தரி,கதிர்செல்வி, சசிகலா, வசந்தி, சமுத்திரகனி,சி.பி.எம். செயலாளர் வி.குணசீலன், பீடி சங்க மாவட்ட நிர்வாகி மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.