tamilnadu

img

நீதிமன்ற தீர்ப்பின்படி முதலீட்டாளர்களுக்கு தொகையை வழங்கிடுக சிஐடியு - பிஏசிஎல் முதலீட்டாளர்கள் முழக்கம்

சேலம்,செப். 22- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிஏ சிஎல் முதலீட்டாளர்களுக்கு முத லீட்டுத் தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு, பிஏசிஎல் முதலீட் டாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பிஏசிஎல் என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் 350 கிளைகளைக் கொண்டு செயல் பட்டு வந்தது. இந்த நிறுவனம் முத லீட்டாளர்களிடம் இருந்து முதலீடு பெற்று முதிர்வு தொகையை வழங்கி வந்தது.

இதனிடையே இந்நிறு வனத்தின் மீது எழுந்த புகாரை யடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்நிறுவனத்தை தடை செய்ததோடு, இந்நிறுவனத் திற்கு சொந்தமான நிலங்களை விற்று முதலீட்டாளர்களுக்கு முத லிட்டு பணத்தை வழங்க உத்தர விட்டது. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு முதலீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகின் றன. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழகத்தில் உள்ள பயனாளிகளுக்கு எவ்வித முதலீட்டுத் தொகையும் கிடைக்க வில்லை.  

இதையடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபடி முதலீட்டாளர்க ளுக்கு முதலீட்டுத் தொகையை விரைந்து கிடைக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இதனை முறைப்படுத்த மண்டல அளவில் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு, பிஏ சிஎல் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், திரளானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.

;