சேலம், அக்.27- மிலாடிநபி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட் டத்தில் அக்.30 ஆம் தேதி யன்று மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதா வது, தமிழ்நாடு அரசு அர சாணை எண்.50 உள், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, நாள்.2012 ஆம் ஆண்டு அக்.29ஆம் தேதியின்படி அக்.30 ஆம் தேதியன்று (வெள்ளிக் கிழமை) மிலாடி நபி (நபி கள் நாயகம் பிறந்த தினம்) தினத்தை முன்னிட்டு மது பானக் கடைகள் மூடப்பட வேண்டும்.
எனவே, மிலாடி நபி (நபிகள் நாயகம் பிறந்த தினம்) தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற் றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற டாஸ்மாக் மது பானக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் ஹோட் டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதி களின்படி கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.