tamilnadu

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே எல்ஐசி உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்

சேலம், நவ. 23- பொதுத்துறை  நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என எல்ஐசி உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் உழைக் கும் பெண்கள் 20 ஆவது மாநாடு காந்திரோடு சாலையில் அமைந் துள்ள சுனில் மைத்ரா நினை வகத்தில் நடைபெற்றது. மாநாட் டிற்கு மகளிர் துணைக் குழு அமைப்பாளர் உஷா தலைமை தாங்கினார்.  சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு வின் மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றி னார். மகளிர் அமைப்பாளர் அனிதா ரோசலின்ட் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டில் பெண்கள், சிறுமி கள் மீதான பாலியல் வன்முறை களை கண்டித்தும், பாதிக்கப்பட் டவர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டும். உழைக்கும் பெண்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் அலுவலகங் களில் ஓய்வு அறை, கழிப்பறைகள் கட்டாயம் அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வரும் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழு விய வேலை நிறுத்த போராட்டத் தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.   காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.தர்மலிங் கம் தொகுப்புரை வழங்கினார். மாநாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், மகளிர் துணைக்குழு நிர்வாகிகள் மற்றும் சேலம், நாமக்கல், தரும புரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு கழக பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

;