tamilnadu

img

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதா? விஏஒ-வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இளம்பிள்ளை, ஜூன் 18- வேம்படிதாளம் கிராம நிர்வாக  அலுவலர் லட்சம் கேட்பதை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஊராட்சி அலுவ லகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம்,  காக்காபாளை யம் அருகே உள்ள  வேம்படிதாளம், ஆனைக்குட்டப்பட்டி, சேனைபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக சுகுணா என்பவர் பணியாற்றி  வருகிறார்.

இவர் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றி தழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்க ளுக்கு பொதுமக்களிடம் லஞ்சம் வசூலித்து வந்ததோடு, லஞ்சம் கொடுக்க மறுத்தால் சான்றிதழ் வழங் குவதில் வேண்டுமென்றே காலதாம தம் படுத்தி வருகிறார். மேலும், இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டு முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதனை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அய்யம்பாளையம் கிளை சார்பில் வேம்படிதாளம் ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா உறுப்பினர் செல்வம் தலைமை வகித் தார். இதில், மாவட்டக் குழு உறுப்பி னர் சந்திரன், சிஐடியு கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் மயில்வே லன், விசைத்தறிசங்க மாவட்டத்  தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகி கள் முத்துசாமி, மோகன்ராஜ், சண்மு கம் கோவிந்தராஜ், நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தனிமனித  இடைவெளியை கடைபிடித்து கலந்து  கொண்டனர்.

;