tamilnadu

img

கருமந்துறை மலை கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோதனை

சேலம், ஜூன் 12- சேலம் அருகே கருமந்துறை மலை கிராமங்களில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சோதனையில் ஈடு பட்டனர். இதில் 3 கள்ளத்துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளத்துப் பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சேலத்தில் உள்ள மலை கிராமங்களில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக காவல்  துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட காவல்கண் காணிப்பாளர் தீபா கானீகேர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய் துறை அலு வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து புதனன்று கருமந்துறை உள்ளிட்ட 27க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சோதனை நடத்தினர். இதில், புதர் மறைவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு துப் பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என காவல்துறையி னர் தெரிவித்துள்ளனர்.

;