tamilnadu

img

ஓமலூர் பத்மவாணி கல்லூரி பட்டமளிப்பு விழா

சேலம், பிப்.8- சேலம், ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில் சனியன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சேலம் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கலைக் கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேல் கலந்துகொண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆய் வியல் நிறைஞர் பாடங்களில் தேர்ச்சி பெற்ற 1287 மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.  மேலும் தங்க பதக்கம் வென்ற மாணவியர்களுக்கும், பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்ற மாணவியர் களுக்கும், கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு  தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின்  செயலாளர் துரைசாமி, தாளாளர் சத்தியமூர்த்தி  உள்பட நிர்வாகிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர். 

;