tamilnadu

img

கருவூலத்துறையின் நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 7- ஊழியர் நலனுக்கு எதிராக செயல்படும் கருவூலத்துறையின் நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சார்நிலை கருவூலங்களில் செயல் படாத இணையதளம் மற்றும் குறை பாடுள்ள மென்பொருளை கொண்டு பணி செய்ய நிர்பந்திப்பது உள் ளிட்ட கருவூலத்துறையின் ஊழியர்  நலனுக்கு எதிரான நடவடிக்கை களை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபாகுதியக சேலம் மேற்கு வட்ட கிளை சூரமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் எஸ்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.செல்வம், சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜவேல், வட்டார இணைச் செய லாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கெங்கவல்லி வட்ட கிளை சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்  சங்க மாவட்ட செயலாளர் ப.வாசு தேவன் மற்றும் கெங்கவல்லி வட் டார துணைத் தலைவர் ராஜேந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேட்டூர் வட்ட கிளையில் கருவூல கணக்குத் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பிர் அ.செ.செய்யது உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், து.சிங்கராயன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் ப.சண்முகம், வரு வாய்த்துறை செயலாளர் ந. வெற்றி வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தருமபுரி
இதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து சார் நிலை கருவூல அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தருமபுரியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், பொருளாளர் கே.புகழேந்தி, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் சி.எம்.நெடுஞ்செழியன், மாவட்டச் செயலாளர் சி.காவேரி, ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் ஆனந்தராம விஜய ரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரூரில் வட்ட செயலாளர் சி.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், வட்டபொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரிமங்கலத்தில் வட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் எம்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரத்தில் வட்ட தலைவர் திம்மராயன் தலைமை வகித்தார். இதில் வட்ட துணைத் தலைவர் சண் முகசுந்தரம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப் பட்டியில் வட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நில அளவை  அலுவலர் ஒன்றிப்பின் மாநில துணை தலைவர் அண்ணாகுபேரன்,  வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். பாலக்கோட்டில் வட்டதலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;