tamilnadu

கொரோனா வதந்தி - அதிகாரிகள் எச்சரிக்கை

இளம்பிள்ளை, மார்ச் 21- சீனாவிலிருந்து சேலம் திரும் பிய மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ள தாக வதந்தி பரவியதை அடுத்து பொது மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து தேவையற்ற வதந்தி களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் சில மாணவர்கள் சீனாவிலுள்ள மருத் துவ கல்லூரியில் மருத்துவப்படிப்பு பயின்று வந்தனர். இவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பி உள்ளனர். இந்நி லையில், அதில் ஒரு மாணவருக்கு கொரோனா காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவையில்உள்ள மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்திற்குள் ளாகினர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், இளம்பிள்ளை, இடங்கண சாலை, கே.கே. நகர், தப்பக்குட்டை, வேம்படிதாளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியிலிருந்து வெளி நாடுக ளிலும், வெளி மாநிலங்களிலும்    100க் கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இம்மாணவர்களில் சில பேர் கடந்த மாதமே வீடு திரும்பி னர். இந்த நிலையில் கடந்த வாரம் சில  மாணவர்கள்  விமானம் மற்றும் ரயில் மூலம் வருவதை தவிர்த்துவிட்டு, சொந்த வாகனங்களில் மும்பை உள் ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பெற்றோர்கள் அவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்கள் 3 மாநிலங் களை  கடந்து வரும் வழியில் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என சுகாதாரத்துறை அதி காரிகள் கண்காணிப்பை தீவிரப்ப டுத்தி எங்களது அச்சத்தை போக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அப்பகு தியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், தேவையற்ற வதந்தி களை பரப்பினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர். 

;