சேலம், டிச.14- மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நகல் எரிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீ சார் கைது செய்தனர் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்து நிறை வேற்றியுள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பு கள் சார்பில் கண்டனம் தெரிவிக் கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகர் வடக்கு பகுதி குழு சார்பில் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய் திருந்தது. இந்நிலையில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலை மையில் காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது போலீசா ருக்கும் வாலிபர் சங்க நிர்வாகி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வாலிபர் சங்க நிர்வாகிகளை கண் மூடித்தனமாக தாக்கினர். மேலும் போராட்டத்தை புகைப்படம் எடுத் துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கி கைது செய்தனர். மேலும் வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர வடக்கு பகுதி குழு தலைவர் பி.சதீஷ்குமார், செயலாளர் ஆர்.பி. கதிர்வேல், நிர்வாகிகள் நாகராஜ், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் உள்ளிட்டவர்களை வலுக்கட்டாய மாக போலீசார் கைது செய்தனர். இதனால் இப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.