tamilnadu

சங்ககிரியில் துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் ஆட்சியர் உத்தரவு

இளம்பிள்ளை, நவ.15-  சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாட்சியர் அலு வலகம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் துணை வட்டாட் சியர்களை நிர்வாக வசதிக்காக  பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்  உத்தரவிட்டுள்ளார்.  

சங்ககிரியில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ரமேஷ் எடப்பாடி தேர்தல் துணை வட்டாட்சியராகவும், மண்டல துணை வட்டாசியர் ராஜ மாணிக்கம் எடப்பாடி தலைமையிடத்து துணை வட்டாட் சியராகவும், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ் சங்க கிரி வட்ட வழங்கல் அலுவலராகவும்,  வட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.